பேரூராட்சி பணியாளர்கள் 2 பேர் பணி இடைநீக்கம்
பேரூராட்சி பணியாளர்கள் 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் பேரூராட்சி பணியாளர்கள் 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
பேரூராட்சி பணியாளர்கள்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் உதவியாளராக கடந்த சில ஆண்டுகளாக பணிபுரிந்து வருபவர் முகைதீன்.
அதேபோல் தூய்மை பணியாளராக பணியாற்றி வருபவர் செல்வின்துரை.
பணி இடைநீக்கம்
இருவரையும் பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இருவர் மீதும் தொடர்ந்து உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்ததாகவும், இந்தநிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.