மேலும் 2 வாலிபர்கள் கைது

கனியாமூர் கலவர வழக்கு மேலும் 2 வாலிபர்கள் கைது

Update: 2022-09-05 17:36 GMT

கள்ளக்குறிச்சி

சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் வீடியோ ஆதரத்தின் அடிப்படையில் கலவரத்தின்போது பள்ளி சொத்துக்களை சேதப்படுத்திய கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா எ.மரூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் ஆண்டப்பன்(வயது 22), செல்வராஜ் மகன் செல்வகாசி(23) ஆகிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்