கள்ளக்குறிச்சி
சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கலவரம் தொடர்பான வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் வாட்ஸ்அப் குழுவில் வன்முறையை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு கலவரம் ஏற்பட காரணமாக இருந்ததோடு கலவரத்தில் கலந்துகொண்டு பள்ளி சொத்துக்களை சேதப்படுத்திய சின்னசேலம் தாலுகா உலகியநல்லூர் கிராமத்தை சேர்ந்த கேசவேலு மகன் அன்பு(வயது 20), போலீஸ் வாகனம் மீது கல்வீசி தாக்கிய உலகங்காத்தான் இந்திராநகரை சேர்ந்த தங்கவேல் மகன் ராம்குமார்(31) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.