பெரம்பலூரில் மேலும் 2 பேருக்கு கொரோனா
பெரம்பலூரில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 2 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 2 பேர் கொரோனாவுக்கு குணமாகியுள்ளனர். தற்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 40 ஆக உள்ளது. மேலும் மாவட்டத்தில் இன்னும் 58 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.