2 மினி லாரிகள் நேருக்கு நேர் மோதல்; 2 பேர் காயம்

கயத்தாறு அருகே 2 மினி லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-06-10 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறு அருகே 2 மினி லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

லாரிகள் மோதல்

நெல்லை மாவட்டம் வாகைகுளம் பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்த பிரம்மநாயகம் மகன் முருகேசன் (வயது 38). லாரி டிரைவரான இவர் விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர்.நகரில் இருந்து ஒரு லாரியில் சிமெண்டு ஏற்றிக்கொண்டு நெல்லை மாவட்டம் பாப்பாக்குடிக்கு சென்று கொண்டிருந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள கரிசல்குளம் விலக்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது மதுரையில் இருந்து நெல்லை டவுன் மார்க்கெட்டுக்கு காய்கறிகள் ஏற்றி வந்த தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த மகேந்திரன் மகன் மதன்குமார் (32) என்பவர் ஓட்டி வந்த லாரி பின்பக்கமாக மோதியதில் சிமெண்டு ஏற்றி வந்த லாரி சாலை ஓரத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

2 பேர் காயம்

இதில் காய்கறி லாரியின் டிரைவர் மதன் குமார் மற்றும் அவருடன் லாரியில் வந்த தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த பெருமாள் மகன் ஜெயபாலன் (29) ஆகிய இருவரும் காயமடைந்தனர்.

தகவல் அறிந்ததும் கயத்தாறு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். காயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் காசிலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்