அடுத்தடுத்து 2 வீடுகளில் ரூ 2½ லட்சம் நகை பணம் கொள்ளை
மயிலம் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் ரூ.2½ லட்சம் நகை-பணம் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை
மயிலம்
மயிலம் அருகே கூட்டேரிப்பட்டு கான்வென்ட் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மனைவி கீதா(வயது 30). திருவிழாவுக்காக நேற்று முன்தினம் செண்டூர் கிராமத்துக்கு சென்றிருந்த இவர் நேற்று மதியம் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த கீதா வீ்ட்டின் உள்ளே சென்று பார்த்தபோது யாரோ மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 5 பவுன் நகைகள், 3 வெள்ளி கொலுசு, ரூ.5 ஆயிரம் ரொக்கம், 3 கிலோ நகையில் பதிக்கும் கற்கள் மற்றும் ஏ.டி.எம்., ஆதார் கார்டு ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதேபோல் பக்கத்து வீட்டில் உள்ள சுமதி என்பவரின் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 1½ பவுன் நகைகள், 3 வெள்ளி கொலுசு ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 2 வீடுகளிலும் கொள்ளை போன நகை-பணத்தின் மதிப்பு ரூ.2½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அடுத்தடுத்து 2 வீடுகளிலும் நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றாா்கள்.