திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள பூவாமி கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆண்டி (வயது 55) மற்றும் ஆண்டியப்பன் (40). இவர்கள் இருவரும் கூலித்தொழிலாளிகள். நேற்று முன்தினம் இரவு இவர்கள் வேலை முடித்துவிட்டு மெதூர் கிராமத்தில் உள்ள கடையில் காய்கறிகளை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் பொன்னேரி- பழவேற்காடு சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த ஆண்டி மற்றும் ஆண்டியப்பன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். தகவலறிந்த பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.