திண்டிவனத்தில்மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் சாவு

திண்டிவனத்தில் இரு மோட்டார் சைக்கிள் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

Update: 2023-08-06 18:45 GMT


திண்டிவனம், 

திண்டிவனம் அடுத்த நெய்குப்பி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகன் வசந்த் (வயது 21). கட்டிட தொழிலாளி. சொந்த வேலை காரணமாக திண்டிவனத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற வசந்த், பின் அங்கிருந்து வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது, அவருக்கு எதிரே திண்டிவனம் அடுத்த வைரபுரம் கிராமத்தை சேர்ந்த கொத்தனார் செந்தூரப்பாண்டி (25) என்பவர் திண்டிவனம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் திண்டிவனத்தில் உள்ள அரசு கல்லூரி அருகே சென்ற போது, எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். இதில் வசந்த், செந்தூரப்பாண்டி ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.

2 பேர் சாவு

அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு, சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வசந்த் இறந்து போனார். செந்தூரப் பாண்டிக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் செந்தூரப்பாண்டி பரிதாபமாக இறந்து போனார். இதையடுத்து அவருடைய உடல் மீண்டும் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.

இதுகுறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்