அன்னதானப்பட்டி:-
சேலம் தாதகாப்பட்டி சண்முக நகரைச் சேர்ந்தவர் குணசேகரன் என்கிற கெத்தை சேகர் (வயது 45). போலீஸ் நிலையங்களில் ரவுடி பட்டியலில் இவரது பெயர் உள்ளதாக தெரிகிறது. இவர் தனது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தினர். இதில் 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள குணசேகரனை தேடி வருகின்றனர்.