விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல்

சிதம்பரத்தில் விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக 4 பேரை கைது செய்தனர்.

Update: 2023-05-18 18:45 GMT

சிதம்பரம், 

சிதம்பரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி உத்தரவின் பேரில் சிதம்பரம் நகர சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிதம்பரம் வடக்கு தில்லைநாயகபுரம் சுடுகாடு அருகே சந்தேகப் படும்படி நின்ற 4 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் பெருமாத்தூர் புதுபிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஜெகநாதன் மகன் தமிழ்மணி (வயது 21), சிதம்பரம் நெல்லுகடை சந்து பகுதியை சேர்ந்த லாலி என்கிற சூரியபிரகாஷ் (21), சிதம்பரம் கன்னிராமன் தெருவை சேர்ந்த சிவகுமார் மகன் அஜய் என்கிற தமிழ்முருகன் (22), நாஞ்சலூர் பகுதியை சேர்ந்த சரபோஜி மகன் அன்புமணி (23), ஆகியோர் என்பது தெரிந்தது.

கைது

மேலும் அவர்கள் 4 பேரும் விற்பனைக்காக 2 கிலோ 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்