நகைக்கடை அதிபரிடம் 2 கிலோ தங்கம் மோசடி

நகைக்கடை அதிபரிடம் 2 கிலோ தங்கம் மோசடி

Update: 2023-07-04 19:30 GMT

கோவை

கோவையில் நகைக்கடை அதிபரிடம் 2 கிலோ தங்கம் வாங்கி மோசடி செய்ததாக தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 கிலோ தங்கம் மோசடி

கோவை விநாயகபுரம் விளாங்குறிச்சி ரோடு அன்னை வேளாங்கண்ணி தெருவை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது56). இவர் கோவை ராஜவீதியில் நகை கடை நடத்தி வருகிறார். ரமேஷ்குமாருக்கு கோவை செட்டிவீதியை சேர்ந்த நகை வியாபாரி ரகுநாத் (43) என்பவருடன் தொழில் ரீதியான பழக்கம் ஏற்பட்டது. ரகுநாத், ரமேஷ்குமாரிடம் நகைகளை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ரமேஷ்குமார் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கத்தை ரகுநாத்துக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் நகைகளை வாங்கி நீண்ட நாட்கள் ஆகியும் ரகுநாத் அதற்குண்டான பணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார்.

தம்பதி மீது வழக்குப்பதிவு

ரமேஷ்குமார் பலமுறை கேட்டும் அவர் நகை, பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

இதனால், ஏமாற்றமடைந்த நகைக்கடை உரிமையாளர் ரமேஷ்குமார் பெரியகடைவீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய 2 பிரிவுகளின் கீழ் ரகுநாத் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த மோசடியில் உடந்தையாக செயல்பட்டதாக ரகுநாத்தின் மனைவி ஸ்ரீலேகா மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்