நன்னடத்தை பிணையை மீறிய 2 பேருக்கு சிறை

நெல்லையில் நன்னடத்தை பிணையை மீறிய 2 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2022-10-14 21:29 GMT

நெல்லை அணைத்தலையூரை சேர்ந்தவர் சின்னதுரை என்ற மாக்கான் (வயது 54). இவர் மீது கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்தில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. எனவே இவரிடம் இருந்து ஒரு வருடத்திற்கான நன்னடத்தை பிணை ஆணை பெறப்பட்டது. அதே போல் சுத்தமல்லி நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த செண்பகராஜ் மீது சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் குற்ற வழக்குகள் உள்ளன. எனவே அவரிடமும் நன்னடத்தை பிணை ஆணை பெறப்பட்டது.

இந்த நிலையில் 2 பேரும் நன்னடத்தை பிணை ஆணையை மீறி செயல்பட்டதால், அவர்கள் மீது அந்தந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் நெல்லை 2-ம் வகுப்பு நிர்வாகத்துறை நடுவர் முன்பு அறிக்கை சமர்ப்பித்தனர். அதன் மீது நெல்லை 2-ம் வகுப்பு நிர்வாகத்துறை நடுவர் விசாரணை நடத்தி சின்னதுரையை 8 மாதங்களும், செண்பகராஜை 3 மாதங்களும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்