தடுப்புச் சுவரில் கார் மோதி 2 பேர் படுகாயம்
குழித்துறை அருகே தடுப்புச் சுவரில் கார் மோதி 2 பேர் படுகாயம
களியக்காவிளை,
கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஷாபி, கார் டிரைவர். இவர் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு அஜீனா என்பவரை காரில் அழைத்து சென்று கொண்டிருந்தார். அந்த கார் குழித்துறை அருகே உள்ள திருத்துவபுரம் பகுதியில் சென்ற போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இதில் காரின் முன்பக்கம் சேதமடைந்தது. மேலும் காரில் இருந்த அஜீனா, டிரைவர் முகமது ஷாபி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.