ஜெயின் மதத்தை சேர்ந்த சிறுவன் உள்பட 2 பேர் துறவறம்
ஜெயின் மதத்தை சேர்ந்த சிறுவன் உள்பட 2 பேர் துறவறம் மேற்கொண்டனர்.
ஜெயின் மதத்தை சேர்ந்த சிறுவன் உள்பட 2 பேர் துறவறம் மேற்கொண்டனர்.
திருப்பத்தூர் செட்டித்தெருவை சேர்ந்தவர் பன்னாலால் கோத்தம் சந்த். இவரது பேத்தியும் ரத்தன்சந்த் மகளுமான சுஷ்மா இல்லற வாழ்வை துறந்து துறவறம் பூண முடிவு செய்தார். அதேபோல் வேலூர் சுனில்குமாரின் மகன் சம்ரத் (வயது 14) என்பவரும் துறவறம் பூண்டார்.
இருவரும் பெரிய குருமார்பரம பூஜய ஆச்சாரிய பகவன் மணிபிரப சூரிஸ்வர்ஜி சாத்வி, சுலோசனா ஸ்ரீஜீ அர்ன் மற்றும் 20 ஆண் குருமார்கள் மற்றும் 17 பெண் குருமார்கள் தலைமையில் சத்தியவாக்கு பெற்று துறவிகளாக மாறும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுஷ்மா மற்றும் சம்ரத் இருவரும் பெற்றோர்களிடம் சம்மதம் வாங்கி துறவறம் ஏற்றனர்.
அப்போது பூஜய ஆச்சாரிய பகவன் மணிபிரப சூரிஸ்வர்ஜி சாத்வி, ஸ்ரீ சுலோசனா ஸ்ரீஜீ அர்ன் ேபசுகையில், ''நான் 9 வயதில் துறவறம் மேற்கொண்டபோது என்னுடன் எனது தாய் மற்றும் தங்கை துறவறம் பூண்டனர். 50 ஆண்டுகள் நிறைவடைந்து 51-வது ஆண்டில் திருப்பத்தூர் ஜெயின் சங்கம் சார்பில் சுஷ்மா மற்றும் சம்ரத் இருவரும் ஜெயின் மத துறவிகளாக கிடைத்தது கடவுளின் அருள்'' என்றனர்.
பின்னர் இருவரும் தலைமுடியை அகற்றினர். அவர்களுக்கு வெள்ளை துணியை பெரிய குரு வழங்கி ஆசிர்வாதம் செய்து இருவருக்கும் துறவிக்கான அங்கீகாரம் அளித்தனர்.
துறவிகளான பிறகு சுஷ்மா மற்றும் சம்ரத் கூறுகையில், ''கடவுளின் அருளால் தங்களை குருவாக அடைந்தது எங்களது வாழ்நாளில் செய்த பெரும் பாக்கியமாகும். இந்த துறவி பயன் கிடைத்தது பெற்றோர்கள் மற்றும் முன் கால பிறவி கடவுளின் அருள் ஆகும். வாழ்நாள் முழுவதும் கடவுளுக்காக சேவை செய்வது எங்களது பாக்கியம் ஆகும்'' என்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பன்னாலால் கோத்தம் சந்த் சன்ஸ், பி.பாரஸ்சந்த் செய்து இருந்தனர்