இரவில் 2½மணி நேரம் மின்தடை

திருநாகேஸ்வரம் பகுதியில் இரவில் 2½ மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

Update: 2023-08-20 20:05 GMT

திருவிடைமருதூர், ஆக.21-

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் 20-க்கும் மேற்பட்ட ஊர்களில் நேற்று இரவு சுமார் 8 மணி முதல் இரவு 10.30 மணி வரை 2½ மணிநேரம் திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.சாக்கோட்டையில் இருந்து திருநாகேஸ்வரத்திற்கு மின்சாரம் வருவதில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக மின் தடை பட்டதாக கூறப்படுகிறது.இரவிலும் உடனடியாக பழுது சரி செய்யப்பட்டு மின்சாரம் தடைபட்ட பகுதிகளுக்கு வழங்கப்பட்டது. 2½ மணி நேரத்திற்கு பிறகு மின் வினியோகம் செயயப்பட்டது.ஆவணி மாதம் பிறந்து முதல் முகூர்த்த நாள் நேற்றும், இன்றும் என்பதால் அதிகளவில் திருமணம், புதுமனை புகுவிழா போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் மின்சாரம் தடைபட்டதால் விழா நடத்துபவர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்