2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம்

2 சிறுமிகளை பாலியல்பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-07-24 16:36 GMT


2 சிறுமிகளை பாலியல்பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கட்டிட தொழிலாளி

கோவை பகுதியை சேர்ந்த 13 மற்றும் 10 வயது சிறுமிகளின் தந்தை கடந்த 2017-ம் ஆண்டு முதல் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்தார்.

அவருடைய 42 வயது நண்பரான அபுதாகீருடன், சிறுமிகளின் தாய்க்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர், சிறுமிகளின் வீட்டில் தங்க தொடங்கினார். கட்டிட தொழிலாளியான அவர், சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

பாலியல் பலாத்காரம்

அப்போது அவர், பள்ளி முடித்து வீட்டிற்கு 2 சிறுமிகளையும் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த சிறுமிகள், தங்களது தாயிடம் புகார் செய்தனர்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமிகளின் தாய், கோவை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் யசோதா தேவி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அபுதாகீரை நேற்று கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்