கஞ்சா வியாபாரிகள் 2 பேர் கைது

கஞ்சா வியாபாரிகள் 2 பேர் கைது

Update: 2022-12-08 21:13 GMT

அழகியபாண்டியபுரம்:

பூதப்பாண்டி சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் தலைமையில் போலீசார் அழகியபாண்டியபுரம் வனச்சரகம் அலுவலகம் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்தனர். உடனே அவர்கள் போலீசாரை தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. போலீசார் அவர்களை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் அழகியபாண்டியபுரம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது 22) மற்றும் வாழையத்துவயலை சேர்ந்த ஆதிஷ் (26) என்பதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 680 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்