ஜமேஷா முபினின் நண்பர்கள் 2 பேர் தீவிர கண்காணிப்பு

கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஜமேஷா முபின் நண்பர்கள் 2 பேரை கோவை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

Update: 2022-11-28 18:45 GMT


கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஜமேஷா முபின் நண்பர்கள் 2 பேரை கோவை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

கார் வெடிப்பு சம்பவம்

கோவை கோட்டைமேட்டில் கடந்த மாதம் 23-ந்தேதி கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் பலியானார். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு இடங்களில் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தற்போது இந்த வழக்கு என்.ஐ.ஏ. விசாரணையில் உள்ளது.

கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஜமேஷா முபினுக்கு உதவியதாக முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவர்களது வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.

மேலும் 2 பேர் தீவிர கண்காணிப்பு

இந்தநிலையில் கோவை நகர போலீசார் கடந்த சில தினங்களாக ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்தவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளளனர். தெற்கு உக்கடம் பகுதியை சேர்ந்த துணிக்கடை ஊழியர் முகமது ஹசன் உள்பட 3 பேர் அவருடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து முகமது ஹசன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. ஜமேஷா முபின் நட்பு வட்டாரத்தில் இருந்த மேலும் 2 பேரை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள். அவர்கள் செல்லும் இடங்கள், அவர்களின் நடவடிக்கைகளையும் கண்காணித்து வருகிறார்கள். அவர்களது வீடுகளிலும் சோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்