வெளிமாநில சிறுமிகள் 2 பேர் மீட்பு

சேலத்தில் வெளிமாநில சிறுமிகள் 2 பேர் மீட்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

Update: 2022-12-07 20:43 GMT

மேற்கு வங்காள மாநிலம் பக்திநகரை சேர்ந்த 17 வயதுடைய சிறுமி திடீரென மாயமானார். தனது மகளை பீகாரை சேர்ந்த அம்ரூல் (வயது 22) என்பவர் கடத்தி சென்றுவிட்டதாக சிறுமியின் பெற்றோர் மேற்குவங்காளத்தில் தங்கள் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் அம்ரூல் பயன்படுத்திய செல்போன், சேலம் சூரமங்கலம் பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சேலத்துக்கு வந்த மேற்கு வங்காள போலீசார், சூரமங்கலம் போலீசாருடன் இணைந்து தேடினர். அப்போது அந்த சிறுமி, வாலிபர் அம்ரூலுடன் மூலப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிறுமியை போலீசார் மீட்டனர்.

இதேபோல் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுமியை அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (26) என்பவர் கடத்தி சென்று விட்டதாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணையில் அந்த சிறுமி, காதலன் சுரேஷ்குமாருடன் சேலம் பள்ளப்பட்டி ஆலமரத்துக்காடு பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து சேலம் வந்த ஆந்திர மாநில போலீசார் அந்த சிறுமியை மீட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்