மின்சார வாரிய ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்

மின்சார வாரிய ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2022-08-09 18:02 GMT

புதுக்கோட்டையில் மகேந்திரன் என்பவர் புதிய வீடு கட்டுமான பணிக்காக தற்காலிக மின் இணைப்பு வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. புதுக்கோட்டை நகர் உபகோட்டம் வடக்குபிரிவு மின்சார வாரிய அலுவலகத்தில் அவர் விண்ணப்பித்திருந்ததில், அவருக்கு அதிகாரிகள் அனுமதி பெறாமலும், பண்டக சாலையில் மின் அளவி பெறாமலும தற்காலிகமாக மின் இணைப்பு வழங்கப்பட்டது தெரியவந்தது. இதில் வணிக ஆய்வாளர் சுப்பிரமணியன், கம்பியாளர் இளங்கோவன் ஆகியோர் முறைகேடாக மின் இணைப்பு வழங்கியது அதிகாரிகளின் ஆய்வில் கண்டறியப்பட்டது. இதையடுத்து 2 பேரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மின்சார வாரிய உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து 2 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்