திருப்பரங்குன்றத்தில் தண்டவாளத்தில் 2 பேர் பிணமாக கிடந்ததால் பரபரப்பு-மோதலில் ஈடுபட்டு ஓடும் ரெயிலில் இருந்து விழுந்தார்களா?

திருப்பரங்குன்றத்தில் தண்டவாளத்தில் 2 பேர் பிணமாக கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஓடும் ரெயிலில் ேமாதலில் ஈடுபட்டு விழுந்துஇறந்து இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

Update: 2023-07-20 21:28 GMT

திருப்பரங்குன்றம்,


திருப்பரங்குன்றத்தில் தண்டவாளத்தில் 2 பேர் பிணமாக கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஓடும் ரெயிலில் ேமாதலில் ஈடுபட்டு விழுந்துஇறந்து இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

தண்டவாளத்தில் பிணங்கள்

மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் அருகே தண்டவாளம் பகுதியில் நேற்று அதிகாலையில் முகம் சிதைந்த நிலையில் உடல் முழுவதும் படுகாயத்துடன் 2 பேர் பிணமாக கிடந்தனர்.

இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மதுரை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

2 பேரின் முகமும் சிதைந்து போய் இருந்ததால் அடையாளம் தெரியவில்லை. இறந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பதும் உடனடியாக தெரியவரவில்லை.

இதுபற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது, ஒருவரின் சட்டைப்பையில் இருந்த துண்டு சீட்டில் செல்போன் எண் எழுதப்பட்டு இருந்தது. அந்த எண்ணில் போலீசார் தொடர்பு கொண்டபோது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

அடையாளம் தெரிந்தது

இறந்தவர்களில் ஒருவரின் வலது கையில் நாகேசுவரி என்றும், நெஞ்சில் அபிராமி என்றும் பச்சை குத்தப்பட்டு இருந்தது. அவர் மதுரையில் இருந்து நெல்லைக்கு பயணம் செய்வதற்கான டிக்கெட் எடுத்துள்ளார். இதைவைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவரைப்பற்றிய விவரங்கள் தெரியவந்தன. அவர் மதுரை பொன்மேனி 3-வது தெருவை சேர்ந்த முனியாண்டி மகன் சுரேஷ் (வயது 31) என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இவர் மீது மதுரை எஸ்.எஸ்.காலனி போலீசில் வழிப்பறி வழக்கு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். பிணமாக கிடந்த மற்றொருவர் யார்? என்பதை அறிய விசாரணை தொடர்ந்து வருகிறது.

காரணம் என்ன?

பிணமாக கிடந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுரேசும், மற்றொரு நபரும் எப்படி இறந்தார்கள்? ஓடும் ரெயிலில் அந்த நபரிடம் சுரேஷ் கைவரிசை காட்டியபோது இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் இருவரும் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

தண்டவாளம் பகுதியில் உடல்கள் கிடந்ததால் யாரேனும் கொலை செய்து உடல்களை தண்டவாளத்தில் தூக்கிப் போட்டுவிட்டு, போலீசாரை திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டனரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் ெபரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்