தென்காசியில் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

தென்காசியில் வருகிற 29-ந்தேதி, 30-ந்தேதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

Update: 2022-09-27 15:58 GMT

தென்காசி நகராட்சி ஆணையாளர் பாரிசான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- அம்பை மார்க்கெட் பிரதான சாலையை நெடுஞ்சாலை துறை மூலம் விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் புதிதாக பாலமும் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் வழியாக தென்காசி நகராட்சிக்கு தாமிரபரணி குடிநீர் கொண்டு வரும் பிரதான குழாய் செல்கிறது. இந்த பணிகள் நடைபெற்று வருவதாலும், அதனை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டி இருப்பதாலும் தென்காசி நகரில் வருகிற 29-ந்தேதி.   30-ந்தேதிகளில் குடிநீர் வினியோகம் செய்ய இயலாத நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்