நாகை மாவட்டத்தில் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
குழாய் பராமரிப்பு பணிகள் காரணமாக நாகை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
குழாய் பராமரிப்பு பணிகள் காரணமாக நாகை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து நாகை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பராமரிப்பு பணி
நாகை மாவட்டத்தில் 893 குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தின் பிரதான நீரேற்றும் குழாய் ஆடுதுறை ரெயில்வே கேட் மற்றும் கீழ்வேளூர் ரெயில்வே கேட் ஆகிய இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை சரி செய்ய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக வருகிற 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை), 9-ந்தேதி (புதன்கிழமை) ஆகிய 2 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
நாகை- வேளாங்கண்ணி
அதன்படி கீழ்வேளூர், கீழையூர், தலைஞாயிறு, நாகை, திருமருகல் ஆகிய ஒன்றிய பகுதிகளுக்கும், நாகை நகராட்சி, வேளாங்கண்ணி பேரூராட்சி மற்றும் கீழ்வேளூர் பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.