இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு 2 நாள் பயிற்சி

தா.பழூர் வட்டார வள மையத்தில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

Update: 2022-07-27 19:33 GMT

அரியலூர் மாவட்டம் தா.பழூர் வட்டார வள மையத்தில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுதா தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் அசோகன் முகாமை தொடங்கி வைத்தார். பயிற்சியாளர்கள் சகாயராஜ், கலியபெருமாள், ஆசிரிய பயிற்றுனர்கள் இரவழகன் ஜெய்சங்கர், சம்பத் அந்தோணிதாஸ் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில், இல்லம் தேடி கல்வி கூடுதல் மையங்கள் தொடங்குவது, மையத்தின் கால அளவு, தொடக்கநிலை, உயர்தொடக்க நிலை மையங்கள், மையம் தொடங்குவதற்கான இடம் தேர்வு செய்தல், மாணவர்களை கையாளும் முறைகள், இல்லம் தேடி கல்வி மையங்களுக்கு வழங்கப்படும் கற்றல் கற்பித்தல் உபகரணங்களை பயன்படுத்தும் முறைகள் குறித்து விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், புதிதாக தொடங்கப்பட உள்ள கூடுதல் மையங்களுக்கான தன்னார்வலர்கள் 26 பேருக்கு இந்த பயிற்சி வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்