கோவைக்கு ரூ.2¾ கோடி தங்கம் கடத்தல்;2 பேர் கைது
சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு ரூ.2¾ கோடி தங்கம் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு ரூ.2¾ கோடி தங்கம் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பயணிகள் சோதனை
வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு அடிக்கடி தங்கம் கடத்தி வரப்படுகிறது. இதனை வருவாய் புலனாய்வு மற்றும் சுங்க அதிகாரிகள் கண்காணித்து வருவதுடன், கடத்தலில் ஈடுபடும் நபர்களை கைது செய்கின்றனர். இருப்பினும் தங்கம் கடத்துவது தொடர் கதையாக உள்ளது.
இந்தநிலையில் சிங்கப்பூரில் இருந்து கோவை வரும் விமானத்தில் பயணிகள் சிலர் நூதன முறையில் தங்கம் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உஷார் அடைந்த அதிகாரிகள் தங்கம் கடத்தி வரும் பயணிகளை பிடிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
நூதன முறையில் கடத்தல்
இதில் சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணம் செய்த 6 பேரை பிடித்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதுடன், அவர்களின் உடமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் 2 பேர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் அவர்கள் உள்ளாடைகள், பேன்ட், பாக்கெட் ஆகியவற்றில் 5.6 கிலோ தங்க நகைகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் சென்னையை சேர்ந்த முகமது அப்சல் (வயது 32) மற்றும் திருச்சியை சேர்ந்த கிருஷ்ணன் (66) என்பது தெரியவந்தது. இதில் முகமது அப்சல் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான தங்கத்தை கடத்தி வந்ததால், அவர் மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த கிருஷ்ணனை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர். மேலும் 3 பேர் ரூ.20 லட்சத்திற்கும் கீழ் தங்க நகைகள் கொண்டு வந்ததால் அவர்கள் மீது வழக்குப்பதிவு மட்டும் செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து ரூ.2¾ கோடி மதிப்பிலான 5½ கிலோ தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு தங்கம் கடத்தப்பட்டு வருவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.