கட்டிட தொழிலாளர்கள் 2 பேர் சாவு

தூத்துக்குடியில் வெவ்வேறு சம்பவங்களில் கட்டிட தொழிலாளர்கள் 2 பேர் இறந்தனர்.

Update: 2023-07-22 18:45 GMT

பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரம்மதேவு மகன் சதீஷ்குமார் (வயது 41). இவர் தூத்துக்குடியில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவர் கால்டுவெல் காலனி பகுதியில் நடைபெற்ற கட்டிடத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த அந்தோணி மகன் சவரிமுத்து (39). கட்டிடத் தொழிலாளியான இவர் சுந்தரவேல்புரம் பகுதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை மீட்டு தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்