விருகம்பாக்கத்தில் கஞ்சா விற்ற 2 கல்லூரி மாணவர்கள் கைது

விருகம்பாக்கத்தில் கஞ்சா விற்ற 2 கல்லூரி மாணவர்கள் கைது கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2023-07-23 07:28 GMT

விருகம்பாக்கம், 

சென்னை விருகம்பாக்கம், முத்துராமலிங்க தேவர் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக முன்னும், பின்னும் நம்பர் பிளேட் இல்லாமல் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி விசாரித்தனர். அதில் வந்த 2 பேரும் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களை சோதனை செய்தனர். அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரிந்தது.

விசாரணையில் அவர்கள், ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த மேத்யூ என்ற பால்மேத்யூ (19), திருவள்ளூர் மாவட்டம், இருளஞ்சேரி பகுதியை சேர்ந்த அரிகிருஷ்ணன் (19) என்பதும், இவர்கள், மதுரவாயல் பகுதியில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருவதும் தெரிந்தது. 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 450 கிராம் கஞ்சா, 2 செல்போன்கள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் அம்பத்தூரில் 4 கிலோ கஞ்சா வைத்திருந்த வில்லிவாக்கம், திருவீதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த யாபேஸ் (20) கைது செய்யப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்