தபால் அலுவலக ஊழியரிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு
தபால் அலுவலக ஊழியரிடம் 2 பவுன் சங்கிலியை பறித்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெரம்பலூர் மாவட்டம் தேவையூர் கிராமத்தை சேர்ந்தவர் ராகவி (வயது 20). இவர் மங்களமேடு அடுத்துள்ள ரஞ்சன்குடி தபால் அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று வழக்கம்போல் பணி முடிந்து ராகவி தனது வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி ராகவி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துகொண்டு தப்பி சென்றான். இந்த சம்பவம் குறித்து ராகவி அளித்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.