2 கன்றுகளை ஈன்ற அதிசய மாடு

மத்தூரில் 2 கன்றுகளை ஈன்ற அதிசய மாட்டை பொதுமக்கள் பார்த்து சென்றனர்.

Update: 2022-12-07 18:45 GMT

மத்தூர்

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மாரி. கூலித்தொழிலாளி. இவர் மாடு வளர்த்து வந்தார். இந்த மாடு நேற்று ஒரு ஆண் கன்றும், பெண் கன்றும் ஈன்றது. இதனால் மாரி மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வந்து அதிசய மாடு மற்றும் கன்றுகளை பார்த்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்