மணல் கடத்தி வந்த 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்
களம்பூர் அருகே மணல் கடத்தி வந்த 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்
ஆரணி
ஆரணியை அடுத்த காமக்கூர் கமண்டல நாகநதி ஆற்றுப்பகுதியில் களம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆற்றுப்படுகை பகுதியில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த காமக்கூர் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ், மணிகண்டன் ஆகிய இருவரும் போலீசாரை பார்த்ததும் மாட்டு வண்டிகளை நடுரோட்டிலேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
போலீசார், 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு வந்தனர்.
தப்பிேயாடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.