பள்ளி மாணவியை கத்தியால் குத்திய 2 சிறுவர்கள் கைது

பள்ளி மாணவியை கத்தியால் குத்திய 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-07-08 19:17 GMT

துவரங்குறிச்சி, ஜூலை.9-

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது மாணவி துவரங்குறிச்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை அவர் பள்ளிக்கு செல்லும்போது 3 மாணவர்கள் மாணவியை வழி மறித்து கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை கத்தியால் குத்திய 2 சிறுவர்களை கைது செய்தனர். மாணவியை கிண்டல் செய்த சிறுவர்களை மாணவி தட்டி கேட்டதால் ஆத்திரத்தில் குத்தியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்