பெங்களூரு வியாபாரிகள் 2 பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக பெங்களூருவை சேர்ந்த வியாபாரிகள் 2 பேரை சாணார்பட்டி போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-14 16:20 GMT

சாணார்பட்டி அருகே கொசவபட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகையிலைப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக சாணார்பட்டி போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சோதனை செய்தபோது 480 கிலோ புகையிலைப்பொருட்கள் இருந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கொசவபட்டியை சேர்ந்த அமுதா (வயது 47), திண்டுக்கல்லை சேர்ந்த மணிகண்டன் (42) உள்பட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பெங்களூருவில் இருந்து சாணார்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு புகையிலைப்பொருட்கள் வாங்கியது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேக்தாவூது தலைமையிலான போலீசார் பெங்களூரு சென்று புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்த நாகேஷ் (60), விஜய் (26) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்