ஆவணம் இல்லாமல் இயங்கிய 2 ஆட்டோக்கள் பறிமுதல்

ராமேசுவரத்தில் ஆவணம் இல்லாமல் இயங்கிய 2 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2023-09-13 18:45 GMT

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்தரவின் பேரில் ராமேசுவரம்-தனுஷ்கோடி செல்லும் சாலையில் நேற்று மாவட்ட மோட்டார் போக்குவரத்து துறையினரும் மற்றும் போலீசாரும் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 ஆட்டோக்களை நிறுத்தி மோட்டார் வாகன போக்குவரத்து ஆய்வாளர் செந்தில் குமரன் மற்றும் போலீசார் சோதனை செய்த போது அதில் 1 ஆட்டோ ராமநாதபுரம் பெர்மிட்டை வைத்து ராமேசுவரத்தில் ஓட்டியது தெரியவந்தது. மற்றொரு ஆட்டோ ஆட்டோக்கான எப்.சி. ஆவணம் இல்லாததும் தெரிய வந்தது. தொடர்ந்து அந்த 2 ஆட்டோக்களையும் பறிமுதல் செய்த போலீசார் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

இது குறித்து மோட்டார் வாகன போக்குவரத்து அதிகாரிகள் கூறும் போது:-

வெளியூர் பெர்மிட்களை வைத்து ராமேசுவரத்தில் ஆட்டோக்களை ஓட்டினால் அந்த ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து பறிமுதல் செய்யப்படும். அதுபோல் ராமேசுவரத்தில் ஓடக்கூடிய அனைத்து ஆட்டோக்களிலும் சரியான ஆவணங்களை வைத்து ஓட்ட வேண்டும். கூடுதல் நபர்களை ஏற்ற வேண்டாம்.

அரசின் விதிமுறைகளை மீறி ஓடும் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்