வீட்டில் கட்டியிருந்த பசுமாட்டை திருடிய சிறுவன் உள்பட 2 போ் கைது
வீட்டில் கட்டியிருந்த பசுமாட்டை திருடிய சிறுவன் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனர்.
ஆவூர்:
விராலிமலை தாலுகா, ஆம்பூர்பட்டி நால்ரோட்டை சேர்ந்தவர் அன்பு (வயது 52). விவசாயியான இவர், கறவை மாடு மற்றும் வெள்ளாடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் தனது ஆடு, மாடுகளை கட்டிவிட்டு வீட்டிற்குள் தூங்கியுள்ளார். நே இன்று காலை வெளியே வந்து பார்த்தபோது கொட்டகையில் கட்டியிருந்த அவரது பசு மாடு மாயமாகி இருந்தது. பின்னர் அப்பகுதியில் தேடிப் பார்த்தபோது அவரது வீட்டின் அருகே விராலிமலை சாலையில் ஒரு சரக்கு வேனில் 2 பேர் பசுமாட்டை ஏற்றி கட்டிக் கொண்டிருந்துள்ளனர். உடனே அன்பு அங்கு சென்றபோது அவரை பார்த்தவுடன் ஆட்டோவில் இருந்த 2 பேரும் அங்கிருந்து தப்பி அருகில் உள்ள புதருக்குள் மறைந்து கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் பதுங்கி இருந்த 2 பேரையும் பிடித்து மாத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லதுரை வழக்குப்பதிவு செய்து பசுமாட்டை திருடிய 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருச்சி கே.கே.நகர் அருகே உள்ள குட்டிஅம்பலக்காரன்பட்டியை சேர்ந்த அண்ணாதுரை மகன் சிவபெருமாள் (25), 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. பின்னர் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி சிவபெருமாளை புதுக்கோட்டை ஜெயிலிலும், சிறுவனை திருச்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.