தொழிலாளி கொலை வழக்கில் 2 பேர் கைது
தொழிலாளி கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொட்டியம்:
தொட்டியம் அருகே உள்ள கொசவம்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த பண்ணைக்காரன் மகன் அங்கமுத்து (வயது 33). சென்ட்ரிங் தொழிலாளியான இவரும், வெங்காயப்பட்டியை சேர்ந்த பெரியண்ணன் மகன் பார்த்திபனும் (22), அவர்களது நண்பரான ஒரு சிறுவன் வீட்டில் மது அருந்தியபோது, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து பார்த்திபன், சிறுவனும் அங்கமுத்துவை அவரது வீட்டில் விட சென்றபோது, மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் பார்த்திபன் மற்றும் சிறுவன் ஆகியோர் அங்கமுத்துவை அரிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே அங்கமுத்து உயிரிழந்தார். இது குறித்து தொட்டியம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி, தலைமறைவாக இருந்த பார்த்திபன் மற்றும் சிறுவனை கைது செய்தனர்.