செல்போன் பறித்த வழக்கில் 2 பேர் கைது
செல்போன் பறித்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்
செல்போன் பறித்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
செல்போன் பறிப்பு
துறையூர் சித்திரப்பட்டியை சேர்ந்தவர் இம்ரான்அகமத். இவர் நேற்று முன்தினம் துறையூரில் உள்ள முசிறி ரவுண்டானாவில் நின்று செல்போன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் இம்ரான் அகமத்திடம் செல்போனை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில் துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான போலீசார் செல்போனை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் நாகலாபுரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
2 பேர் கைது
அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 23), திண்டுக்கல்லை சேர்ந்த காளிமுத்து (19) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இம்ரான்அகமத்திடம் செல்போன் பறித்து சென்றவர்கள் என தெரியவந்தது. மேலும் காளிமுத்துவும், மணிகண்டனும் வழிபறி திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் எனவும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த செல்போனையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.