தச்சு தொழிலாளி வீட்டை சேதப்படுத்திய 2 பேர் கைது
தச்சு தொழிலாளி வீட்டை சேதப்படுத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சின்னசேலம்,
சின்னசேலம் அருகே தென்பொன்பரப்பி சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராயப்பன் மகன் பூமாலை (வயது 41). இவர் ஈரோட்டில் தங்கி தச்சு வேலை செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான கூரை வீட்டின் அருகில் நத்தம் புறம்போக்கு இடத்தினை அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (63). தினேஷ்குமார் (33) ஆகிய இருவரும் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கேட்ட பூமாலையின் தாய் அகிலாண்டம், அண்ணன் முத்துசாமி ஆகிய இருவரையும் அவர்கள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. மேலும் பூமாலையின் கூரை வீட்டின் சுவற்றை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் வழக்குப்பதிவு செய்து கோவிந்தராஜ், தினேஷ்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.