பார் உரிமையாளரை மிரட்டிய 2 பேர் கைது; பட்டா கத்தி பறிமுதல்
பார் உரிமையாளரை மிரட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பட்டா கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
மணப்பாறை, அக்.24-
மணப்பாறையை அடுத்த பொன் முச்சந்தி பகுதியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் அருகே பார் செயல்பட்டு வருகிறது. நேற்று இங்கு வந்த 2 பேர் தீபாவளி வசூல் கேட்டு பார் உரிமையாரை பட்டா கத்தியை வைத்துக்கொண்டு மிரட்டினர். இது குறித்து மணப்பாறை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பட்டா கத்தியை காட்டி மிரட்டிய கரும்புளிப்பட்டியை சேர்ந்த ஸ்டாலின் (வயது 20), மணிகண்டன் (23) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த பட்டா கத்தியை பறிமுதல் செய்தனர்.