கடைக்காரரை மிரட்டிய 2 பேர் கைது
கடைக்காரரை மிரட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்
மதுரை சம்மட்டிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 42). இவர் அந்த பகுதியில் கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது, கடையில் 2 கோழிகளும், சி.சி.டி.வி. கேமராவும் திருடுபோயிருந்தன. இதுகுறித்து கடையில் இருந்த மற்றொரு கேமராவில் பார்த்தபோது, அதேபகுதியை சேர்ந்த சஞ்சய் மற்றும் தனுஷ்கோடி ஆகியோர் அதனை திருடியது தெரியவந்தது. இதுபற்றி, ராஜேஷ் சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இருவரும் ராஜேஷை கத்தியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து, ராஜேஷ் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த எஸ்.எஸ்.காலனி போலீசார், சஞ்சய் மற்றும் தனுஷ்கோடி ஆகியோரை கைது செய்தனர்.