இருசக்கர வாகனம்-செல்போன் திருடிய 2 பேர் கைது

இருசக்கர வாகனம்-செல்போன் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-14 18:39 GMT

க.பரமத்தி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையிலான போலீசார் வள்ளிபுரம் பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், வேலாயுதம்பாளையம், கண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரகுமான் (வயது 24), 17 வயது சிறுவன் என்பதும், இவர்கள் 2 பேரும் சேர்ந்து க.பரமத்தி அருகே உள்ள அத்திப்பாளையம் செல்வ நகர் காலனியை சேர்ந்த ஆனந்த் மனைவி லோகாம்பாளிடம் செல்போன் மற்றும் இருசக்கர வாகனம், நொய்யல் குறுக்கு சாலையை சேர்ந்த சிவசங்கரன் என்பவரிடம் செல்போன் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து ரகுமான் மற்றும் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்