வாலிபரிடம் செல்போன் திருடிய 2 பேர் கைது
கோவை அருகே வாலிபரிடம் செல்போன் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை
ராமநாதபுரம் மாவட்டம் வாகைக்குளம் பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 23). இவருடைய சகோதரர் கோவையில் உள்ள தியாகி குமரன் மார்க்கெட்டில் வாழை இலை கடை நடத்தி வருகிறார். இதனால் கோவை வந்த மாதேஷ், தனது சகோதரர் அறையில் படுத்த தூங்கிகொண்டு இருந்தார். அப்போது அந்த அறைக்குள் புகுந்த 2 பேர் மாதேசின் விலை உயர்ந்த செல்போனை தூக்கிக்கொண்டு தப்பி ஓடினார்கள்.
அதை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மாதேஷ், 2 பேரையும் பிடித்து பெரியக்கடை வீதி போலீசில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கோவைப்புதூரை சேர்ந்த விஷ்ணு (22), அஜித்குமார் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த ரூ.45 ஆயிரம் செல்போனை பறிமுதல் செய்தனர்.