சங்கிலி பறித்த 2 பேர் கைது

சங்கிலி பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2023-08-15 20:53 GMT


மதுரை எஸ்.எஸ்.காலனி ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 21). சம்பவத்தன்று இவர் எஸ்.எஸ். காலனி பாரதியார் நகர் 7-வது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது 3 பேர் அவரை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் அவரை ஆபாசமாக பேசி கல்லாலும், கத்தியாலும் தாக்கினர். மேலும் அவர் அணிந்திருந்த 1½ பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பினர். இது குறித்து அவர் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து எஸ்.எஸ்.காலனி பாரதியார் 3-வது தெருவை சேர்ந்த அப்துல் ரகுமான் (19), ஜானகி நாராயணன் தெரு டேவிட் குமார் (24) ஆகிய இருவரை கைது செய்தனர். முத்துப்பாண்டியை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்