ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-16 18:59 GMT

நெல்லை உணவு பொருள் கடத்தல் தடுப்புபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மானூர் அருகே ரஸ்தா பகுதியில் வந்த ஒரு வேனை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 630 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து வேனை ஓட்டி வந்த டவுன் பகுதியை நாகராஜன் (வயது37), கருப்பசாமி (30) ஆகிய 2 பேரையும் கைது செய்து, அரிசி மற்றும் வேனை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்