ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
நெல்லை அருகே காரில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
நெல்லை உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி, சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் ஆகியோர் நேற்று தாழையூத்து பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி பார்த்தபோது, அதில் 14 மூட்டைகளில் 700 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கீழநத்தத்தை சேர்ந்த முத்துசங்கர் (வயது 24), டிரைவர் மாரி (32) ஆகிய இருவரையும் கைது செய்தனர். ரேஷன் அரிசி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.