ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-18 20:51 GMT


மதுரை மண்டல உணவுப்பொருள் தடுப்பு காவல் கண்காணிப்பாளர் விஜய் கார்த்திக் ராஜா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை சோதனை செய்தனர். அதில் 750 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆட்டோவில் வந்த மதுரையை சேர்ந்த செல்வகுமார், சண்முகவேல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்