சாராயம் கடத்திய 2 பேர் கைது

சாராயம் கடத்திய 2 பேர் கைது

Update: 2022-06-29 15:36 GMT

நாகூர்:

நாகூர் மேலவாஞ்சூர் அருகே சாராயம் கடத்திய 2 பேைர போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 10 லிட்டர் சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

வாகன சோதனை

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் சாராயம் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். நேற்றுமுன்தினம் நாகூரை அடுத்த மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் நாகூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திட்டச்சேரி சாலை அருகே சந்தேகத்தின் பேரில் நின்றுகொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வேதாரண்யம் அவுரிகாடை சேர்ந்த அன்பரசன் (வயது35), திருவள்ளுர் ஜோதிநகர் கோவில் தெருவை சேர்ந்த மகேஷ் (32) என்பதும், அவர்கள் விற்பனைக்காக இரண்டு பைகளில் சாராய பாக்கெட்டுகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

2 பேர் கைது

இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பரசன், மகேஷ் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 10 லிட்டர் சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்