மதுரையில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது; 21 கிலோ பறிமுதல்
மதுரையில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது; 21 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது
மதுரை கூடல்புதூர் போலீசார் அவர்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரோந்து சென்றனர். இதையொட்டி கூடல்நகர் ரெயில்வே குடோன் அருகே போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி விசாரித்தனர். அதில் அவர்கள் செல்லூர் அருள்தாஸ்புரம், பிள்ளையார் கோவில் தெரு ஹரிஹரன் (வயது 22), சோழவந்தான் ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த விஜயேந்திரன் (23) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்த போது அதில் 21 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.