காரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது
காரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டார்.
மணிகண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயாலயன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை ஆலம்பட்டி பிரிவு சாலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்திய போது அதில் ஒரு சாக்கு பையில் வைத்து கஞ்சா கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் கண்தீனதயாள் நகரை சேர்ந்த நைனாமுகமது (வயது 42), தெற்கு பாகனூரை சேர்ந்த சண்முகம் மகன் சதீஷ்குமார் (24) என்பதும் தெரியவந்தது. பின்னர் கஞ்சாவுடன் காரை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும் திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.