சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் கிருஷ்ணமநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் வந்த சுக்கிரவார்பட்டியை சேர்ந்த கருத்தப்பாண்டி (வயது25) உள்பட 2 பேர் 50 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.