கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது

கூடலூர் அருகே கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-06-12 13:38 GMT

கூடலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் குள்ளப்பகவுண்டன்பட்டி பிரிவு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் மறித்தனர்.

பின்னர் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் நாராயணத்தேவன்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த சந்தோஷ் (வயது 23), சிவனேந்திரன் (25) என்பதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்